நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது தனக்குப் பிடிக்காத்தால், தான் வகித்துவரும் நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கடிதம் கொடுத்துள்ளார் பொன்வண்ணன்.
அந்நிலையில், பொன்வண்ணனின் பணி நடிகர் சங்கத்தில் தொடர வேண்டும் என்பதற்காக, அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நமது செயலாளர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருப்பதை தொலைக் காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கடந்த கால நிர்வாகிகளை இதை காரணம் காட்டி, குறைசொல்லி, பொறுப்புக்கு வந்த நாம், அதே தவறை செய்வது சரியா..? இதனால் எதிர்காலத்தில் அரசியலற்ற "நடிகர் சங்க தலைமை" என்ற நம்பிக்கையே அடிபட்டு போகிறது.
அதையெல்லாம் உடனிருந்து திட்டமிடுவதை விட்டு, தேர்தல் களத்திற்கு சென்று விட்டால், இங்கே பொதுச் செயலாளர் வேலையை, முடிவை யார் எடுப்பார்கள்? எனவே, இதற்குபின் இப்பொறுப்பில் இருந்தால், எதிர் காலத்தில் என் தனித்தன்மையை இழப்பதுடன், முரண்பாடான மன நிலையிலும் செயல்பட வேண்டி வரலாம். அது தற்போதைய நிர்வாக செயல்பாட்டிற்கு தடையாக மாறும்.