சென்னை லலிதா ஜூவல்லரி கொள்ளை: 50 சவரன் தங்கநகை மீட்பு!

திங்கள், 1 பிப்ரவரி 2021 (08:20 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை லலிதா ஜுவல்லரி அலுவலகத்தில் வைத்து இருந்த 5 கிலோ தங்க நகைகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் சென்னை லலிதா ஜுவல்லரி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை மதிப்பிடும்போது 5 கிலோ தங்க நகைகளை காணவில்லை என மேலாளர் முருகன் என்பவர் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தானை சேர்ந்த ஊழியர் ஒருவர் தான் திருடியது என்பது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது 
 
இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய அந்த ஊழியரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதன் நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின் படி 50 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டதாகவும் ராஜஸ்தானை சேர்ந்த பிரவீன் சிங் என்பவரை தொடர்ந்து போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்