எங்களை கருணை கொலை செய்யுங்கள்: 10 வயது மகளுடன் தர்ணா போராட்டம் செய்யும் ஓட்டேரி காவலர்..!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:22 IST)
ஓட்டேரி  காவல் நிலையத்தில் தலைமை காவலாக பணியாற்றும் கோதண்டபாணி என்பவர் 10 வயது மகளுடன் தேசியக்கொடியை கையில் பிடித்தவாறு  எங்களை கருணை கொலை செய்யுங்கள் என சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  
 
தலைமை காவலர் கோதண்டபாணி மகளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில்  மருந்து மாத்திரைகள் காரணமாக எதிர் விளைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மருத்துவர்கள் நோயை சரியாக கண்டறியாமல் சிகிச்சை அளித்ததால் மகளின் வலது காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு மருத்துவர்களின் அலட்சியப் போக்கே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தன்னையும் தனது மகளையும் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவர் போராட்டம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவரை மற்ற காவலர்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்