சுவாதி கொலை: சர்ச்சை கருத்து கூறிய ஒய்.ஜி.மகேந்திரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

வியாழன், 30 ஜூன் 2016 (09:25 IST)
சுவாதி கொலை பற்றி சர்ச்சையான கருத்து கூறிய நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் வீட்டிற்கு பாதுகாப்பு கருதி போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.


 

 
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி சுவாதி என்ற இளம்பெண் மர்ம நபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
அவரின் முகநூல் பதிவு கீழே: 
 
ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது. யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை. 
 
இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால், ராகுல் ஓடி வந்திருப்பான். ஊடகங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும். தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள். 
 
திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள். காமரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள். 
 
என்ன செய்வது இறந்தது பிராமண பெண் இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும்??? இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப் போகிறாயோ???” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. அவர் ஜாதி மத உணர்வுகளை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் என்று முஸ்லீம் அமைப்பு உட்பட பலரும்  கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தியாகராயநகர் கிரி சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், தான் அதனை பதிவிடவில்லை. வேறு ஒருவரின் பதிவினை பகிர்ந்திருந்தாகவும், அதே சமயம் இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இருப்பதாகவும் ஒய்.ஜி.மகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்