கொரோனா ஊரடங்கு: ஆதரவற்றவர்களுக்கு பிஸ்கட் வழங்கிய காவலர்கள்!

ஞாயிறு, 22 மார்ச் 2020 (11:38 IST)
கொரோனா முன்னெச்சரிக்கையாக மக்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகள் உள்ள ஆதரவற்றவர்களுக்கு காவலர்கள் உணவு வழங்கிய சம்பவம் வைரலாகி வருகிறது.

நாட்டில் கொரோனா பாதிப்பை தடுக்கும் பொருட்டு பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை செயல்படுத்தியுள்ளனர். மருந்துகடைகள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகள், வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. மக்களை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் வீடற்ற மக்களை சமூக நலக்கூடங்களில் தங்க வைத்து உணவளிக்க மாநகராட்சிக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பலரை மாநகராட்சி நிர்வாகம் தங்க வைத்து உணவு வழங்கியுள்ளது. இருப்பினும் இதுபோன்ற நாட்டின் செயல்பாடுகள் குறித்து ஏதும் அறியாத சில ஆதரவற்றோர் இன்னமும் சாலைகளிலேயே தங்கள் பொழுதுகளை கழித்து வருகின்றனர்.

சுற்றிலும் எந்த கடைகளும் இல்லாததால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக சென்னையில் பாதுகாப்பு பணிகளில் இருக்கும் காவலர்கள் சிலர் ஏற்கனவே பிஸ்கட்டுகளை வாங்கி வைத்திருந்து அவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

காவலர்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்