மக்கள் ஊரடங்கு: ரயில்வே ஸ்டேஷனில் தஞ்சமடைந்த மக்கள்!

ஞாயிறு, 22 மார்ச் 2020 (11:17 IST)
நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் சாலைகளில் வாழும் மக்கள் பலர் ரயில்வே ஸ்டேஷனில் தஞ்சமடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டு வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் மோடி இன்று மக்கள் ஊரடங்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடைகளும் மூடப்பட்டுள்ளது.

சென்னையில் வீடில்லாத நடைபாதையில் வாழும் மக்களை சமூக நல கூடங்களில் தங்க வைத்து உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில மாநிலங்களில் முன் தயாரிப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படாததால் நடைபாதை வாழ் மக்கள் தங்க இடமின்றி தவிப்பதாக கூறப்படுகிறது.

வெளி மாநிலத்திலிருந்து மும்பைக்கு பல்வேறு கூலி வேலைக்காக வந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் வந்து காத்திருக்கின்றனர். ஆனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கு பிளாட்பார்ம்களிலேயே தங்கியுள்ளனர். இதுதவிர ரயில்நிலையத்திற்கு அருகே வீடற்று வசிக்கும் மக்களும் ரயில் நிலையத்திற்குள் புகுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மும்பை ரயில் நிலையமே ஜனத்திரளாக காட்சியளிக்கிறது. மக்கள் அதிகமாக கூட கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு மக்கள் ரயில் நிலையத்தில் கூடியிருப்பது தொற்று ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Migrant workers rushing back home from Mumbai. This is from a railway station in Mumbai from earlier today.
Later in the day, PM Modi asked Indians to try and stay where they are for a few days.

Video via @rounakview / @TheQuint pic.twitter.com/1UmQ5Znszh

— Jaskirat Singh Bawa (@JaskiratSB) March 21, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்