டீ குடித்து விட்டு காசு தராமல் தகராறு! – காவலர்களை சஸ்பெண்ட் செய்த கமிஷனர்!

புதன், 7 ஜூன் 2023 (12:19 IST)
சென்னையில் டீக்கடை ஒன்றில் டீ குடித்து விட்டு காசு தராமல் தகராறு செய்த காவலர்களை போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட இரவு பகல் பாராது அயராது உழைப்பவர்கள் காவல் துறையினர். எத்தனையோ நல்ல காவல் அதிகாரிகள் மக்களின் நண்பனாக நல்ல விஷயங்கள் பல செய்து செயல்பட்டு வருகின்றனர். எனினும் ஒரு சில காவலர்களின் முறை தவறிய செயல்கள் மக்கள் மனதில் காவல்துறை குறித்த அதிருப்தியை ஏற்படுத்தி விடுகின்றன.

சமீபத்தில் சென்னை படப்பை அருகே உள்ள டீக்கடை ஒன்றில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி உள்ளிட்ட 4 காவலர்கள் டீ குடித்துள்ளனர். அவர்கள் குடித்த டீக்கு காசு கேட்டதால் கடைக்காரருக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் கவனத்திற்கு சென்ற நிலையில், டீக்கு காசு தராமல் தகராறு செய்த காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி உள்ளிட்ட 4 பேரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது சின்ன பிரச்சினைதானே என நினைக்காமல் தவறு செய்த காவல் துறையினர் மீது பாரபட்சமின்றி கமிஷனர் அமல்ராஜ் எடுத்துள்ள நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்