காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திமுக சார்பில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்கள் நல கூட்டணி கட்சிகள் பங்கேற்காது என வைகோ அறிவித்தார். ஆனாலும் திருமாவளவன் இது குறித்து பரிசீலிப்பதாக கூறினார். பாஜக, அதிமுக கட்சிகள் இதில் இந்த கூட்டம் தேவையில்லை என கூறியிருந்தது.
தமக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த அனைத்து கட்சி கூட்டம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.
அதில், காவிரி சிக்கலுக்காக அனைத்துக் கட்சி கூட்டம்: திமுக-காவிரி உரிமையை இவர்களே தாரைவார்ப்பார்களாம். உரிமைக்காக இவர்களே போராடுவார்களாம். நல்ல நாடகம்! என கூறியுள்ளார்.