இடஒதுக்கீடு என்னாச்சு? அமைச்சர் வீட்டில் பாமக பேச்சுவார்த்தை!

புதன், 3 பிப்ரவரி 2021 (12:41 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து அதிமுக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக பாமக வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக – அதிமுக கூட்டணி அமைக்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர் தங்கமணி வீட்டில் பாமக நிர்வாகிகள் இட ஒதுக்கீடு இல்லாவிட்டாலும் தற்போதைக்கு உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்