சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக இருக்கும் பிரதமர் மோடி!

வியாழன், 20 அக்டோபர் 2016 (16:51 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக பேசி வந்தார். முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவருக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்தார்.


 
 
சசிகலாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அடுக்கிக்கொண்டே போனார் சசிகலா புஷ்பா. இப்பொழுது சசிகலா புஷ்பா மீது எதிர்வினைகள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா தனக்கு பிதமர் மோடி ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளார்.
 
சில நேரங்களில் சசிகலா புஷ்பாவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த கேள்விக்கு பதில் அளித்த சசிகலா புஷ்பா, என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஆதரவாக இருக்கிறது.
 
பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர். பிரதமரின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அராஜகமான போக்குடன் செயல்பட்டு, முதல்வரை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று யாரும் நினைத்தால் கட்டாயம் குரல் கொடுப்பேன் என்றார்.
 
மேலும், எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது முதல்வர்தான். இந்த நேரத்தில் நான் தட்டிக் கேட்பதை தொண்டர்கள் விரும்புகின்றனர் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்