'வணக்கம்' என தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி!

வியாழன், 26 மே 2022 (19:34 IST)
பிரதமர் மோடி இன்று சென்னை வந்திருக்கும் நிலையில் நேரு விளையாட்டு அரங்கில் நிகழும் நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார்
 
தமிழக மக்கள், மொழிம் தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது என்று கூறிய பிரதமர் மோடி செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டினார் 
 
உலகம் முழுவதும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன என தமிழின் பெருமை குறித்து கூறிய பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார் 
 
மேலும் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமான உலகத்தரம் வாய்ந்த திட்டம் என்றும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடு கிடைத்துள்ளன என்றும் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்