விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? நேரம் ஒதுக்கி விசாரித்த மோடி!

வியாழன், 23 ஜூன் 2022 (09:21 IST)
பிரதமர் மோடி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் கேட்டறிந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். கட்சியின் முக்கியமான ஆலோசனை கூட்டங்களில் அவர் பங்கேற்றாலும் எதுவும் பேசாமல் அமர்ந்தே இருப்பார். சமீப காலமாக அவரது உடல்நிலை மோசமாகி வருவதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் சமீபத்தில் உடல்நல குறைவால் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் அவரது வலது காலில் இருந்து விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இந்த செய்தி அவரது தொண்டர்கள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
இதனைத்தொடர்ந்து விஜயகாந்த பூரண குணமுடன் வீடு திரும்ப அரசியல் தலைவர்களும் சக நடிகர்களுக்கு வேண்டினர். அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் கேட்டறிந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.  விஜயகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டு தெரிந்துக்கொண்டு பின்னர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்ததாகவும் தொலைபேசியில் பிரேமலதாவிடம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்