பிளஸ்-2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்த தகவல்

புதன், 22 ஜூலை 2020 (20:53 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளிவந்தது என்பதும் இந்த தேர்வை எழுதியவர்கலின் மொத்த எண்ணிக்கை: 51,415 என்றும் இதில் தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களின் சதவிகிதம்‌ 92.3% என்றும், மாணவியர்‌ 94.80 தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவர்கள்‌ 89.41% தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், வழக்கம்போல் மாணவியர்‌, மாணவர்களை விட 5.39% அதிகம்‌ தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்றும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
 
மேலும் பிளஸ்-2 மாணவர்கள் வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அவரவர் பள்ளிகளில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்