ஓவரா புகழாதீங்கப்பா!! புல்லரிக்குது: ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் பொன்.மாணிக்கவேல் கலகல

வெள்ளி, 30 நவம்பர் 2018 (12:29 IST)
தமிழக ரயில்வே பாதுகாப்பு பிரிவின் ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் சிறப்பு பிரிவி அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தார்.


இவரது அதிரடி நடவடிக்கையால் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு திருடி கொண்டுசெல்லப்பட்ட பல்வேறு சிலைகள் அதிரடியாக மீட்கப்பட்டன.
 
டியூட்டின்னு வந்துட்டா இவர யாரும் அடிச்சுக்க முடியாது. எப்பொழுதும், யாருக்காகவும் பயப்படாத அவர் பணியில் சிறப்பான அதிகாரி என பெயரெடுத்தவர். சிலை கடத்தல் சம்மந்தமான வழக்குகளை அவர் விசாரித்து எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் அவர் தமிழக மக்களிடையே சூப்பர் ஸ்டார் ஆனார்.
 
இந்நிலையில் அவர் இன்றுடன் பணியிலிருந்து ஓய்வுபெறும் நிலையில் அவருக்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
 
பின்னர் பேசிய அவர் யாருக்காகவும் எதுக்காகவும் பணியில் வளைந்துகொடுத்து கோகாதீர்கள். நேர்மையாக செயல்படுங்கள் என சக அதிகாரிகளுக்கு அட்வைஸ் கொடுத்தார். பின்னர் பேசிய அவர் எல்லாரும் என்னை பயங்கமாக புகழுகிறீர்கள். தயவு செய்து அதனை குறைத்துக் கொள்ளுங்கள். எனக்கு புல்லரிக்குது என நகைச்சுவையுடன் தெரிவித்தார். எது எப்படியாயினும் அரசு, ஒரு நல்ல அதிகாரியை மிஸ் பண்ணப்போகிறது என்பது தான் உண்மை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்