1 லிட்டர் பால் விலை ரூ.210: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (10:29 IST)
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் 210 ரூபாய்க்கு விற்பனை ஆவதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
பாகிஸ்தானில் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கடியில் உள்ளது என்பதும் இலங்கை போல் பாகிஸ்தானும் விரைவில் திவால் ஆகும் என்றும் கூறப்படுகிறது. 
 
அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை நிறுத்தி விட்டதால் பாகிஸ்தான் நாடு பெரும் திட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் ஒரு லிட்டர் பால் ரூபாய் 210 என்றும் ஒரு கிலோ சிக்கன் 650 முதல் 750 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இருபது லட்சம் பேர் வீடுகளை இழந்து உள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி இயற்கை பேரிடர் உள்ளிட்டவை காரணமாக பாகிஸ்தானில் விலைவாசி விண்ணை முட்டியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பரிதாபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்