சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

புதன், 19 ஜனவரி 2022 (07:45 IST)
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 75 நாட்களாக உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம் 
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று 76வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
இரண்டு மாதங்களுக்கு மேல் உயராமல் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் உயருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்