இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது ஒரு பக்கம் பொதுமக்களுக்கு நிம்மதி அளித்தாலும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.