சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

வியாழன், 9 ஜூன் 2022 (07:51 IST)
கடந்த 15 நாட்களுக்கு மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என பல நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்