200வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை: சந்தேகிக்கும் பி.டி.ஆர்!!

புதன், 7 டிசம்பர் 2022 (08:26 IST)
பெட்ரோல் டீசல் விலை மாறாமல் இருப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கடந்த சில மாதங்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் அதாவது 200வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை ஆகி வருகிறது.  

இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ள இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாறாமல் இருப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருப்பது ஏன்? ஒருவேளை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் சில சக்திகள் பாதுகாக்கின்றன்னவோ…

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்