கேரள பல்கலைக்கழகத்தில் பெரியார் பாடம் சேர்ப்பு!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (08:36 IST)
கேரளாவில் உள்ள கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
தந்தை பெரியார் அவர்கள் பெண் உரிமைக்காக பாடுபட்டவர் என்பதும் மூட பழக்கவழக்கங்களை ஒழிப்பதற்காக பல முயற்சிகள் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் அவர் பல போராட்டங்கள் நடத்தி உள்ளார் என்பதும் அதனால் அவர் வைக்கம் வீரர் என்று போற்றப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தமிழக மக்கள் போலவே கேரள மக்களும் பெரியாரின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெரியாரின் கொள்கைகளை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பெரியாரின் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. 
திராவிட தேசியம் என்ற பெயரிலான பாடத்தில் பெரியாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த கருத்துக்கள் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்