மக்கள் தவறு செய்து விஜயகாந்தை உட்கார வைத்துவிட்டனர்- விஜபிரபாகரன்

செவ்வாய், 9 மார்ச் 2021 (21:43 IST)
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக இன்று கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததால்  அக்கட்சியின் கூட்ணியிலிருந்து விலகியது.

இதையடுத்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டில் நடைபெற்ற தேமுதிக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஜயபிரபாகரன், இனிமேல் விஜயகநந்த் மற்றும் பிரேமலதாவை இணைந்து என்னைப் பார்ப்பீர்கள்.என் தந்தை சம்பாதித்த அனைத்தையும் மக்களுக்காகவே கொடுத்தவர். கொரோனா காலத்தில் கூட இறந்த மருத்துவரை புதைக்கத் தன் சொந்த நிலத்தை கொடுத்த முன் வந்தவர் விஜயகாந்த். இப்படிப்பட்ட தலைவராக எனவிஜய்காந்தை மக்கள் தவறு செய்து உட்கார வைத்துவிட்டீர்கள் எனத் தெரிவித்தார்.

பின்னர், பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய பிரபாகரனிடம் செய்தியாளர்கள் , ம.நீ,ம மற்றும் அமமுகவுடன் கூட்டணி வைக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எந்தக் கட்சியுடணும் தேமுதிக கூட்டணி இல்லை; தேமுதிக தெய்வத்துடன் தான் கூட்டணி எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்