சசிகலாவை ஆதரித்த நீ ஊருக்குள் நுழையாதே. எம்.எல்.ஏவுக்கு ஊர்மக்கள் வைத்த போர்டு

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (22:30 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக எம்.எல்.ஏ ஆதரவாக இருந்தாலும், தமிழக மக்களின் ஆதரவு சுத்தமாக இல்லை என்பதை சமூக வலைத்தளங்களில் இருந்து தெரிய வருகிறது.



மக்களின் பணியை ஆற்ற வேண்டிய எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் கூத்தடித்து வருவதும் கோடிக்கணக்கான பணத்திற்கு விலை போவதும் மக்களின் பார்வைக்கு தெரிய வந்துள்ளதால் எம்.எல்.ஏக்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் மக்கள்

இந்த கோபத்தின் வெளிப்பாடாக பல ஊர்களில் சசிகலாவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும் நிலையில் ஒரு ஊரில் சசிகலாவை ஆதரித்த எம்.எல்.ஏவே, இந்த ஊருக்குள் நீ காலடி வைக்காதே, மீறினால் எங்கள் காலணி பேசும் என்று போர்டே வைத்துள்ளனர்.

மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்