மொல்லமாரிகளுடன் தமிழக அமைச்சர்களை ஒப்பிட்டு பேசிய திமுக பிரபலம்!

சனி, 29 ஜூலை 2017 (12:30 IST)
தமிழக அமைச்சர்களை மொல்லமாரிகளுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு திமுகவில் ஐக்கியமாக உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா.


 
 
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும் என திமுக சார்பில் நேற்று முன்தினம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் பழ.கருப்பையா பிரபல வார இதழின் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
 
இந்த பேட்டியில் பேசிய அவர் தமிழக அமைச்சர்களை மொல்லமாரிகளுடன் ஒப்பிட்டு பேசினார். அதாவது, மொல்லமாரிகள் காவலர்களுக்கு பயப்படுவதுபோல நமது மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் டெல்லியில் உள்ள மோடி அரசுக்கு பயப்படுகிறார்கள்.
 
எனவே இவர்களால் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக எதையும் செய்ய முடியாது. தமிழக மக்களை காப்பாற்றவும் முடியாது. காவிரி நீர் சிக்கலாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி எந்த விஷயத்திலும் அவர்களால் மத்திய அரசை எதிர்த்து நிற்க முடியாது என்றார் கடுமையாக.

வெப்துனியாவைப் படிக்கவும்