இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர் மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் “முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பவும், புகைப்படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தவும் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை. அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமுடன் இருக்கிறார்” என்று கருத்து தெரிவித்தார்.