கட்சி, ஆட்சி இரண்டும் காப்பாற்றப்பட நானே முதல்வராக வேண்டும் என சசிகலா என்னிடம் கூறினார். எனவே, முதல்வர் பதவியை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால், சிறிது நாட்களிலேயே, சசிகலாவை முதல்வராக்க தினகரன் விரும்புவதாக, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். மேலும், தம்பிதுரை உள்ளிடவர்களும் அதுபற்றி பேசி என்னை சங்கடத்துக்கு ஆளாக்கினார்கள். எனவே, ராஜினாமா கடிதத்தை அவர்களிடம் கொடுத்தேன்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நான் டெல்லிக்கு சென்ற பின் அவர் அமைச்சர்களுடன் வந்தார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் பிரதமரை சந்திக்கும்போது அவரும் கூட வரலாமா என கேட்டான்? அப்போதும் அவருக்கு அனுமது கிடைக்கவில்லை. பிரதமரை சந்திப்பது குறித்த நடைமுறை கூட தெரியாத தம்பிதுரை இவ்வளவு நாள் எம்.பி. பதவியில் தனது காலத்தை ஓட்டியுள்ளார், என்றார்.