கமலை மிரட்டி உள்ளார் பன்னீர்செல்வம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

திங்கள், 7 டிசம்பர் 2015 (08:56 IST)
மக்களின் வரிப்பணம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை என்று, தன் நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் கமல், இதற்காக அவரை மிரட்டுவது போல அறிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் பன்னீர்செல்வம் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளர்.


 

 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
 
சென்னையில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலைக்கு, செயல்படாத அரசாங்கமே காரணம் என்ற உண்மையை, வெளிப்படையாகச் சொன்னார், நடிகர் கமல் ஹாசன். அதற்காக அவர் மீது பாய்ந்துள்ளார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
 
மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கே இந்த நிலைமை என்றால், தமிழகத்தின் மற்ற பகுதிகளை கற்பனை செய்து பாருங்கள். ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் சீர்குலைந்துள்ளது. மக்களின் வரிப்பணம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை' என, தன் நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், நடிகர் கமல் ஹாசன்.
 
இதற்காக கமலை மிரட்டுவது போல, அறிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர். விஸ்வரூபம் படப் பிரச்னைக்கு, முதல்வருக்கு நன்றி கூறிய கமல், இப்போது அறிக்கை விடலாமா என கேட்டு, அமைச்சர் அவரை மிரட்டி உள்ளார்.
 
அதிக வரி கட்டும் நபர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன், தன் வரிப்பணம் என்ன ஆனது என்று கேட்பது நியாயமானது. அவரின் கருத்துக்கு உரிய பதில் அளிக்காமல், கேள்வி கேட்கும் குடிமக்களையே பதில் கேள்வி கேட்பது, நல்ல ஜனநாயக அரசுக்கு அழகல்ல என்று அவர் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்