பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

வியாழன், 2 டிசம்பர் 2021 (16:10 IST)
தமிழகத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் தாய், தந்தையரை இழந்த மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு உறவினர்களோ, தன்னார்வலர்களோ கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு உதவி வருகின்றனர். பல மாணவர்களுக்கு அந்த உதவி கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த உதவித் தொகையை பெற விரும்பும் மாணவர்கள் சம்பந்தபட்ட பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்