நீதி கேட்டு நெடும் பயணம் ; மக்களை சந்திக்கும் ஓ.பி.எஸ்..

வியாழன், 16 பிப்ரவரி 2017 (15:58 IST)
மக்களிடம் நீதி கேட்பதற்காக ஓ.பி.எஸ் நெடும் பயணம் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது குறித்த குழப்பம் இன்று முடிவிற்கு வந்துள்ளது. சசிகலா நியமித்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பததியை அலங்கரிக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4.30 மணியளவில் அவருக்கும், அவரது அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
 
மேலும், இன்னும் 15 நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், சசிகலா தரப்பிற்கு எதிராக போராடிய ஓ.பி.எஸ், இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும், மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தர்மயுத்தம் தொடரும் என அவர் கருத்து  தெரிவித்துள்ளார். அதேபோல், தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டு, மனசாட்சி படி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும் என மாஃபா பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
மேலும், மக்களிடம் நீதி கேட்டு அவர் நெடும் பயணம் செல்ல இருப்பதாகவும் அவரின் ஆதரவாளர்கள் கூறினர். ஆனால், அந்த பயணத்தை அவர் எப்போது தொடங்குவார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை...

வெப்துனியாவைப் படிக்கவும்