எடப்பாடியிடம் மேடையிலேயே புகார் கூறிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் - வீடியோ

செவ்வாய், 2 ஜனவரி 2018 (15:33 IST)
கரூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கரூர் அமைச்சரின் செயல் சரியில்லை என்று பொது இடத்திலேயே ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தினார்.
 
அந்த விழாவில் ஒ.பி.எஸ் ஆதரவாளர்களை புறக்கணித்ததோடு, விளம்பரங்களிலும், ஒ.பி.எஸ் படத்தை விஜயபாஸ்கர் தரப்பு புறக்கணித்தது. எனவே, ஒ.பி.எஸ் ஆதரவாளர்களோ, அவர்களது சொந்த செலவில் அனைவரின் விளம்பரங்களையும் வைத்து கொண்டனர். 
 
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க சார்பிலோ, அல்லது அரசு சார்பிலோ எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் ஒ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏக்களான கரூர் கு.வடிவேல், கிருஷ்ணராயபுரம் எஸ்.காமராஜ் உள்ளிட்டோர்களை விஜயபாஸ்கர் அடியோடு ஒதுக்கி வைத்தார்.
 
இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்த போதும், தமிழக அளவில் ஆங்காங்கே பெரும் கொண்டாட்டங்களை நடத்திய அ.தி.மு.க வினர். ஆனால், கரூர் மாவட்டத்தில் மட்டும் இ.பி.எஸ் அணி மற்றும் ஒ.பி.எஸ் அணி என்று தனித்தனியாக நடத்தினார்கள். 
 
முழுக்க, முழுக்க, கரூர் மாவட்ட செயலாளரும், கரூர் எம்.எல்.ஏ வும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செயலால் ஒரே அணி இணைந்தும், கரூரை பொறுத்தவரை இணையாமல் உள்ள நிலையில் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தும் எந்த வித நடவடிக்கையும் கட்சி ரீதியாக யாரும் எடுக்கவில்லை. 
 
இந்நிலையில் கரூருக்கு திண்டுக்கல் வழியாக சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வரவேற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், முன்னாள் எம்.எல்.ஏக்களும், ஒ.பி.எஸ் ஆதரவாளர்களுமான கு.வடிவேல், எஸ்.காமராஜ் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அணிவித்தனர். 
 
அதன்பின், முன்னாள் எம்.எல்.ஏ வும், ஒ.பி.எஸ் ஆதரவாளருமான கு.வடிவேலு, கரூர்  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது செயலால் கட்சியில் பிளவு ஏற்படுவதோடு, அவரால் உங்கள் (இ.பி.எஸ்) அணியும், ஐயா ஒ.பி.எஸ் அணியும் கரூரில் இணையாமல் இருக்கிறது எனப் புகார் கூறினார். மேலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை விஜய்பாஸ்கர் புறக்கணிப்பதாகவும் கூறினார்.
 
பொது இடத்திலேயே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வைத்து கொண்டு முதல்வரிடமே குற்றம் சாட்டிய நிகழ்ச்சி அ.தி.மு.க வினரிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டும், காணாதவாறு இருந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முகம் சிவந்தது.
 
அதேபோல், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சால்வை போர்த்தும் போது, அவரது (அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்) சகோதரர் ரெயின்போ சேகருக்கு மட்டும் தனித்துவம் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சியும் அ.தி.மு.கவினரிடையே மிகவும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த வீடியோ தற்போது ஆங்காங்கே வைரலாகி வருகின்றது.

 

சி.ஆனந்தகுமார் - கரூர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்