இந்தியா பிரிக்க முடியாத தேசம்: ஒன்றிய அரசு குறித்து ஓபிஎஸ் அறிக்கை

ஞாயிறு, 4 ஜூலை 2021 (12:35 IST)
கடந்த சில மாதங்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகின்றனர். இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பேரறிஞர் அண்ணா உள்பட பல சட்ட மேதைகள் இந்தியாவை ஒன்றியம் என்றுதான் கூறினார்கள் என்று திமுக விளக்கம் கொடுத்தாலும் திடீரென இத்தனை ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசு என்பதை கையில் எடுத்து உள்ளது ஏன் என்பது புரியாத புதிராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவினருக்கு முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீசெல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்றும், இந்திய நாடு பிரிக்க முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்