எம்.ஜி.ஆர் விழா அழைப்பிதழில் ஓ.பி.எஸ் புகைப்படம் மிஸ்ஸிங் - பின்னணி என்ன?

ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (08:54 IST)
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் இடம் பெறாமல் போனது அவரின்  ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
ஓ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவி கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டாலும், அவருக்குரிய மரியாதை மற்றும் அங்கீகாரத்தை எடப்பாடி தரப்பு கொடுப்பதில்லை என பொதுவாகவே ஒரு பேச்சு இருக்கிறது. 
 
இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதனால், கிரீன்வேஸ் ஆலை மற்றும் நந்தனம் சாலை என அனைத்து இடத்திலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் எம்.ஜி.ஆர் முகத்தை விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முகமே அதிகமாக தெரிகிறது. 
 
அதேபோல், செய்திதாள்களில் அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களிலும் ஓ.பி.எஸ்-ஸின் புகைப்படம் இல்லை. இது ஓ.பி.எஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்