நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்த ஓபிஎஸ்: மதுரையில் பரபரப்பு

சனி, 28 ஜூலை 2018 (21:54 IST)
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தமிழகம் வந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சென்று விசாரித்த நிர்மலா சீதாராமன், சென்னையில் ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடித்த பின்னர் மதுரை சென்றார்.
 
மதுரை விமான நிலையத்திற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன் அங்கு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நிர்மலா சீதாராமனை வரவேற்காமல், இன்னொரு விமானத்தில் சென்னை திரும்பினார்
 
சமீபத்தில் டெல்லியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்ததால், ஓபிஎஸ், அவரை வரவேறகாமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. துணை முதல்வர் வரவேற்கவில்லை என்பதால் அவரை வரவேற்க காத்திருந்த அதிமுக பிரமுகர்களும் திரும்பி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்