எம்.எல்.ஏ.க்களை மீட்க கூவத்தூருக்கு செல்கிறார் ஓ.பி.எஸ்...

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (13:13 IST)
சசிகலா தரப்பினரால் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களை சந்திக்க முதல்வர் ஓ.பி.எஸ் கூவத்தூருக்கு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது...


 

 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். இன்று மாலைக்குள் அவர்கள் கர்நடக உயர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது... 
 
இந்நிலையில், கடந்த 8ம் தேதி முதல், அதிமுக எம்.எல்.ஏக்கள், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் உள்ள  ‘கோல்டன் பே ஹவுஸ்’ எனும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபின், ஆளுநரிடம் அவர்களை அழைத்து செல்லும் முடிவில் இருந்தார் சசிகலா. ஆனால், தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்து விட்டதால், எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..
 
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக முதல்வர் ஓ.பி.எஸ் கூவத்தூருக்கு செல்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது...

வெப்துனியாவைப் படிக்கவும்