பாஜகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து அதிமுக பிரமுகர்கள் சமீப நாட்களாக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, ‘மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தால் இஸ்லாமியர்கள் தங்களுக்கு எதிராக இருப்பதாகவும் கூறியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி விவகாரங்கள் குறித்து தனிப்பட்ட கருத்துகளை ஊடகங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் பேட்டி தரக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகற்தின் கூட்டணி வியூகங்களைக் குறித்து கழகத் தலைமை மட்டுமே முடிவெடுக்கும். கழக உடன்பிறப்புக்கள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்கக் ௯டாது. அனைத்திந்திய அண்ணை திராவிட முன்னேற்றக். கழகம் அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணி நிலை குறித்து கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புக்கள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும், ஜனநாயகப் பண்பும் நிறைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் கழக ஒருங்கிணைப்பாளரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் ஆராய்ந்து கழகத்தின் கொள்கை கோட்பாடுகளின் படி முடிவெடுப்பார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழிகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுக பற்றி தனி நபர்களின் விமர்சனங்களும் கருத்துக்களும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி கழகத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அத்தகையை செயல்களில் ஈடுபடவேண்டாம். என்று கழகத்தார்களை கண்டிப்புடன் நெறிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
மக்கள் நலப் பணிகளை திறம்பட ஆற்றி கழகத்திற்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே கழக உடன்பிழப்புக்கள் இப்போது ஈடுபட வேண்டும். கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு. பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது