அப்போது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சோழவந்தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை உடனடியாக வெளியே செல்ல கோஷமிட்டனர். இதனால் அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.மேலும் அதிமுகவினர்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், போராட்டக்காரர்கள் உடனடியாக இவரை வெளியேற சென்னார்கள். இதனையடுத்து அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பிற்கு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ”எனது சொந்த ஊர் பரவை அருகே உள்ளது. நாங்களும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். சிலரது தூண்டுதல் காரணமாக இதுபோல் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. சுய நலநோக்கம் மற்றும் அரசியல் காரணமாக வரவில்லை. தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எனது ஆதரவை தெரிவிப்பேன்” என்று தெரிவித்தார்.