இது குறித்து போராடி வரும் மாணவ மாணவிகளிடம், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், பள்ளி தாளார் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து பெற்றோரின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், பள்ளி தாளாளர் மீதான பாலியல் புகரை அடுத்து, திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியில் நடக்கும் பருவத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் இதுகுறித்த தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.