இந்நிலையில், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவில் கூறியுள்ளதாவது, “கடந்த 2004 ஆம் ஆண்டு, எஸ்ஆர்எம் பல்கலைகழக வேந்தர் பச்சமுத்து, என்னிடம் 1 கோடியே 20 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். அதனை திரும்பத் தர மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.