பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: அண்ணாமலை வாக்குறுதி..!

Siva

திங்கள், 5 பிப்ரவரி 2024 (07:05 IST)
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு என்ற பகுதியில் நேற்று அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும்  அப்போது  தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி நடக்கும் என்றும் தெரிவித்தார்.

காமராஜர் ஆட்சியில் பல அணைகள் கட்டப்பட்டன, அதன் பிறகு வந்த முதலமைச்சர்கள் யாரும் அவரை போல் செயல்படவில்லை என்றும் தெரிவித்தார். அதிமு,க திமுக என மாறி மாறி பங்காளிகள் சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர் என்றும் சட்டத்துக்கு புறம்பாக கல்குவாரிகளில் கோடிக்கணக்கில் திமுகவினர் சம்பாதித்து உள்ளனர் என அண்ணாமலை தெரிவித்தார்.  

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் அதன் பிறகு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

ஒன்பது தலைமுறையாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலை செய்யவில்லை என்றும் எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது என்றும் இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை நிச்சயம் வரும் என்றும் அவர் கூறினார்

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்