சீறிப்பாயும் காளை; பழங்காலத்தில் ஜல்லிக்கட்டு இப்படித்தான் நடந்தது! (வீடியோ இணைப்பு)

வெள்ளி, 13 ஜனவரி 2017 (16:39 IST)
தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை உத்தரவை பெற்றுள்ளது பீட்டா அமைப்பு. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.


 
 
ஆனால் காளைகளை எங்கள் குழந்தைகளை போல வளர்த்து வருகிறோம் அது எங்கள் குடும்ப உறுப்பினர் போன்றது. காளையுடன் நாங்கள் விளையாடுவது தான் ஜல்லிக்கட்டு இது எங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

 

 
 
இந்த ஆண்டு தடையையும் மீறி நாங்கள் எங்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்தியே தீருவோம் என இளைஞர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பழங்காலத்தில் எப்படி நடைபெற்றது என்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்