அடுத்த சில நிமிடங்களில் அந்தத் தியாகியை அணுகிய அதிகாரிகள், இந்தப் பரிசும், சால்வையும் ஏற்கெனவே பாராட்டப்பட்ட மற்றொரு தியாகியினுடையது என்று திரும்பப்பெற்றனர். இதனால், வருத்தமடைந்த தியாகி சுப்பிரமணி, நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் கூறியதாவது, ”விழாவுக்கு 8 தியாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், நிகழ்ச்சியில், 11 பேர் கலந்து கொண்டனர். அதனால் பரிசுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அந்த தர்மசங்கட நிலை ஏற்பட்டது” என்றார்.