தியாகிகளை அவமதித்த அதிகாரிகள்: கோவையில் அசிங்கம்

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (15:06 IST)
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா வ.உ.சி. பூங்காவில் நடைபெற்றது.


 


விழாவில் கெளரவிக்கப்படுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள் 11 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதில், பங்கேற்ற பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த தியாகி சுப்பிரமணிக்கு ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பரிசு வழங்கி, சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்தத் தியாகியை அணுகிய அதிகாரிகள், இந்தப் பரிசும், சால்வையும் ஏற்கெனவே பாராட்டப்பட்ட மற்றொரு தியாகியினுடையது என்று திரும்பப்பெற்றனர். இதனால்,  வருத்தமடைந்த தியாகி சுப்பிரமணி, நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் கூறியதாவது, ”விழாவுக்கு 8 தியாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், நிகழ்ச்சியில், 11 பேர் கலந்து கொண்டனர். அதனால் பரிசுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அந்த தர்மசங்கட நிலை ஏற்பட்டது” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்