ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சென்னை எழிலகத்தில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக் கமிஷனின் தலைவராக கடந்த செப்.30ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், இதுவரை விசாரணை தொடங்கப்படாமலேயே இருந்தது.
அந்நிலையில், ஆறுமுகம் தலைமையிலான குழு இன்று ஜெ. வசித்து வந்த போயஸ்கார்டன் வீட்டில் விசாரணையை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, ஜெ.வின் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், ஆறுமுகம் கலந்துகொள்ளவில்லை.