தமிழகம், கேரளா, கர்நாடகா பகுதிகளில் பரவலாக பெய்யும் பருவமழை இன்று முதல் தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் விவசாய தேவைகளுக்கும், நீர் பாசனத்திற்கும் பெரும்பாலும் மக்கள் வடகிழக்கு பருவமழையையே நம்பியுள்ளனர். தமிழகத்தின் நீர் தேவையில் சராசரி பங்கை வடகிழக்கு பருவக்காற்றால் பெய்யும் மழையே தீர்த்து வைக்கிறது. தற்போது தமிழகத்தின் பல ஆறுகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும் நிலையில் பருவ மழையும் தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.