இதன்படி ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ஜூலை 14ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்திற்கு பதில் மண்டபத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது