பாலத்தில் கார் நிறுத்தினால் அபராதம் கிடையாது: காவல்துறை அறிவிப்பு..!

Siva

செவ்வாய், 15 அக்டோபர் 2024 (06:54 IST)
பள்ளிக்கரணை மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாது எனவும், அபராதத்தை கைவிடுவதாகவும் தாம்பரம் காவல் ஆணையரகம் உறுதி.

அவசர காலங்களில் வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்துவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்த நிலையில், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக பாதுகாப்பான இடம் குறித்து காவல்துறையிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என தாம்பரம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் சென்னையில் கனமழை பெய்த போது பெரும் வெள்ளம் ஏற்பட்டு கார்கள் மூழ்கியது என்பதும் ஒவ்வொரு காருக்கும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை காரின் உரிமையாளர்கள் செலவு செய்த நிலையில் இந்த முறை சுதாரித்து மழை வருவதற்கு முன்பே பாலங்களில் பார்க்கிங் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலங்களில் பார்க்கிங் செய்யப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அது குறித்து கருத்து கூறிய காரின் உரிமையாளர்கள் கார் மழையில் மூழ்கினால் 50 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிக் கொள்ளலாம் பரவாயில்லை என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று காவல்துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்