சசிகலா முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது: சீமான் ஓப்பன் டாக்!

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (08:36 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் கட்சியின் தலைமை பதவியான பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


 
 
சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என பல மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அவர் பொதுச்செயலாளர் ஆவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என்ற கோஷமும் அதிமுகவில் எழ ஆரம்பித்துள்ளது.
 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து கொண்டே பல கோடி மக்களை ஒரு ஆடியோ மூலம் தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. அவரது விவகாரத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.
 
அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பதை அந்த கட்சியின் பொதுகுழு தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் தற்போது ஆர்.கே நகர் தொகுதி காலியாக உள்ளது. அங்கு சசிகலா போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர் தமிழக முதல்வராக கூட அவருக்கு வாய்ப்புள்ளது.
 
சசிகலா முதல்வர் ஆவதை அதிமுக கட்சியினர் விரும்புவதால் அதை யாரும் தடுக்க முடியாது என சீமான் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்