நவம்பர் மாதம் 19 ம் தேதி, தமிழகத்தின், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
ஆனால் கரூர் மாவட்ட ஆட்சியரும், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கு.கோவிந்தராஜ், ஒரே ஒரு முறை தான் செய்தியாளர்களை சந்தித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் வந்ததாகவும், கரூர் மாவட்டத்தில் குறிப்பாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் நியாயமான முறையில் தேர்தல் நடக்கும் என்று பேட்டி கொடுத்து விட்டு, முன்னணி தொலைக்காட்சி என்று ஒரு சில (மூன்று) தொலைக்காட்சிகளை மட்டும் அழைத்து தனியாக பேட்டியளித்துள்ளார்.
அம்மாவின் தொலைக்காட்சியான ஜெயா டி.வியும் இல்லை, எதிர்கட்சியினர் நடத்தும் கலைஞர் தொலைக்காட்சியையும் கூட அழைக்க வில்லையாம், மேலும் குறிப்பிட்ட பேமஸ் சேனல்கள் மட்டும் இருந்தால் மட்டும் போதும் என்பது அவரது கருத்தாக கூறப்படுகின்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி (நடுநிலையானவர்), தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகளில் பாகுபாடு காண்பிப்பது எப்படி நியாயம் என்கின்றனர் நடுநிலையானவர்கள்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லாக்கானி மற்றும் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் நஜிஸ் சைதி வரை இந்த விவகாரம் சென்றுள்ளதாம், எது எப்படியோ, தேர்தல் நடுநிலையாகவும், ஒளிவு மறைவின்றி நடக்க வேண்டுமென்பது நடுநிலையாளர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களின் கருத்தாகும்.