சசிகலா, தினகரனுக்கு இனி அதிமுகவில் இடமில்லை. ஆவேசம் அடைந்த ஜெயகுமார்

செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (23:18 IST)
நேற்றுவரை சின்னம்மா, சின்னம்மா என்று வாய் நிறைய கூப்பிட்ட ஜெயகுமார் இன்று திடீரென ஞானோதயம் வந்து சசிகலா குடும்பத்தினர்களுக்கு இனி அதிமுகவில் இடமில்லை என்று ஆவேசமாக பேசியதை அதிமுகவின் எம்.எல்.ஏக்களும் தொண்டர்களும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.




 

சசிகலா குடும்பத்தின் தலையீடு இனி கட்சியில் இருந்தால் கட்சியும் ஆட்சியும் அதோகதிதான் என மத்திய அரசு தம்பித்துரை மூலம் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில் தினகரனை கட்சியில் இருந்து ஓரம்கட்ட மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி, சிவி சண்முகம் உள்பட மூத்த அமைச்சர்கள் இன்று திடீரென கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழக நிதி அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், 'அதிமுக கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி கொண்டிருப்பதாக ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் எண்ணுவதாகவும், அதனால் இனி மேல் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குடும்பத்தின் தலையீடு அதிமுக கட்சியில் இருக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நிலை தற்போது உள்ளது எனவும், அதனால் அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்