புதிய காற்றழுத்த தாழ்வால் தமிழகத்திற்கு பாதிப்பா? தமிழ்நாடு வெதர்மேன்!

வியாழன், 16 டிசம்பர் 2021 (10:27 IST)
புதிய காற்றழுத்த தாழ்வு வங்ககடலில் தோன்றியுள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் டுவிட் செய்துள்ளார் 
கடந்த மாதம் அடுத்தடுத்து தோன்றிய மூன்று காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் இதனால் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று புதிதாக வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் கொண்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் புதிதாக தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை என்றும் கடலோர பகுதி வழியாகவே இந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை விட்டு கடந்து விடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் டுவிட் செய்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்