தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசலுக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது